இன்று மாலை வெளியாகிறது சந்தானம் படத்தின் டிரைலர்
|'இங்க நான்தான் கிங்கு' திரைப்படம்' மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'இங்க நான்தான் கிங்கு' படத்தின் டிரைலர் இன்று மாலை 4.50 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.