< Back
சினிமா செய்திகள்
சமுத்திரக்கனி நடித்துள்ள தலைக்கூத்தல் படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி நடித்துள்ள 'தலைக்கூத்தல்' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
19 Jan 2023 8:48 PM IST

நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'தலைக்கூத்தல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி, தற்போது ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 'தலைக்கூத்தல்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேனி சார்லஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்