< Back
சினிமா செய்திகள்
ரணம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது
சினிமா செய்திகள்

'ரணம்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது

தினத்தந்தி
|
16 Feb 2024 2:16 PM IST

டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்.

சென்னை,

ஷெரிப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள திரைப்படம் 'ரணம்'. வைபவின் 25-வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, பதமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிதுன் மித்ரா புரொடக்சன்ஸ் சார்பில் மது நாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். முனீஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'ரணம்' திரைப்படம் வருகிற 23-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'ரணம் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது. டிரைலரை நடிகர் சிம்பு வெளியிட உள்ளார்.

மேலும் செய்திகள்