< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் மிஸ்டர் பச்சன் பட டிரெய்லர்

image courtecy:instagram@raviteja_2628

சினிமா செய்திகள்

வைரலாகும் 'மிஸ்டர் பச்சன்' பட டிரெய்லர்

தினத்தந்தி
|
7 Aug 2024 9:31 PM IST

'மிஸ்டர் பச்சன்' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. 'மாஸ் மகாராஜா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனது திரையுலக வாழ்க்கையை 'கர்தவ்யம்' படத்தில் மூலம் தொடங்கினார். பின்னர், பெங்கால் டைகர், ராஜா தி கிரேட், வால்டேர் வீரய்யா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் ஹரிஸ் ஷங்கர் இயக்கிய 'மிஸ்டர் பச்சன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுபலேகா சுதாகர் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்தநிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், தற்போது இந்த டிரெய்லர் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்