< Back
சினிமா செய்திகள்
மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
19 Jan 2024 3:12 AM GMT

'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிஜோ ஜோஸ் 'ஜல்லிக்கட்டு', 'அங்கமாலி டைரிஸ்', 'சுருளி', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற பல படங்களை இயக்கி கவனம் பெற்றார். இவர் தற்போது மோகன்லால் நடித்துள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வருகிற 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேயர்கள் காலகட்டத்தில் நடப்பது போன்று படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்