மித்ரன் ஜவஹர் இயக்கும் 'அரியவன்' படத்தின் டிரைலர் வெளியானது..!
|மித்ரன் ஜவஹர் இயக்கும் 'அரியவன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது
சென்னை,
2008-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். சமீபத்தில் 'திருசிற்றம்பலம்' படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து மித்ரன் ஜவஹர் அறிமுக நடிகர் இஷான் கதாநாயகனாக நடிக்கும் 'அரியவன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரனாலி கோகரே, டேனியல் பாலாஜி, சத்யன், ரவி வெங்கடராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'அரியவன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அரியவன்' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.