< Back
சினிமா செய்திகள்
மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
13 Sept 2023 8:27 PM IST

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் 'மார்கழி திங்கள்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்