< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மம்முட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படத்தின் டிரைலர் வெளியானது
|10 Feb 2024 10:24 PM IST
'பிரமயுகம்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'பிரமயுகம்'. இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராமச்சந்திர சக்கரவர்த்தி மற்றும் எஸ்.சஷிகாந்த் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'பிரமயுகம்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. 'பிரமயுகம்' திரைப்படம் வருகிற 15-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் கருப்பு வெள்ளை (Black & White) படமாக மட்டுமே வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.