< Back
சினிமா செய்திகள்
The trailer of ``LubberPandhu  was released
சினிமா செய்திகள்

`லப்பர் பந்து' படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
28 Aug 2024 8:15 PM IST

`லப்பர் பந்து' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லாஞ்சிறுக்கியே' வெளியாகி இணையத்தில் வைரலானது. அடுத்த மாதம் 20-ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்