< Back
சினிமா செய்திகள்
கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

கார்த்தி நடித்துள்ள 'விருமன்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
3 Aug 2022 3:45 PM GMT

நடிகர் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'விருமன்'. இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'விருமன்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

'விருமன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் இன்று நடைபெற்றது. ஆக்சன் காட்சிகளுடன் வெளியான விருமன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்