< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது
|25 Jun 2024 1:19 PM IST
'இந்தியன் 2' படத்தின் டிரைலர் இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள "கதறல்ஸ்" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று இரவு 7 மணிக்கு டிரைலர் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.