< Back
சினிமா செய்திகள்
ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பி.டி.சார் படத்தின் டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள 'பி.டி.சார்' படத்தின் டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
16 May 2024 6:16 PM IST

'பி.டி.சார்' திரைப்படம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஒரே சமயத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களைத் தொடர்ந்து, சினிமாவுக்கு வந்த ஹிப்ஹாப் ஆதி பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சுந்தர்.சி இயக்கிய அரண்மனை உள்ளிட்ட பெரும்பாலான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இதையடுத்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இறுதியாக அவரது நடிப்பில் 'வீரன்' திரைப்படம் வெளியானது.

தற்போது ஆதி 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி, பாக்கியராஜ், பிரபு, பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படம் விளையாட்டுத் துறை ஆசிரியரின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவாகி உள்ளது. 'பி.டி.சார்' திரைப்படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்