சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள 'காட்பாதர்' படத்தின் டிரைலர் வெளியானது..!
|சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள 'காட்பாதர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்த படத்துக்கு 'காட்பாதர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கிறார். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் பிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.