< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'கோட்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது
|17 Aug 2024 6:44 AM IST
ஏஜிஎஸ் நிறுவனம் 'கோட்' படத்தை தயாரித்துள்ளது
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகின.
இந்த நிலையில் 'கோட்' படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.