< Back
சினிமா செய்திகள்
டோபமைன் படத்தின் டிரெய்லர் வெளியானது
சினிமா செய்திகள்

'டோபமைன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
19 Sept 2024 5:28 PM IST

டோபமைன் திரைப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

சென்னை,

சமீபத்தில் வெளியான 'வெப்பம் குளிர் மழை' படத்தை பாஸ்கர் இயக்கினார். இந்த படத்தில் திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையேவும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது திரவ் அடுத்ததாக புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'டோபமைன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஹேஷ்டேக் எப்.டி.எப்.எஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வெவ்வேறு சூழலில் இருந்த வந்த நபர்கள் அவர்களின் வாழ்க்கை ஒரு கொலையில் ஒன்று சேர்வது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யா, மற்றும் பலர் நடித்துள்ளனர். திரவ் இயக்கும் இப்படத்திற்கு அவரே படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளார். இப்படம் வெறும் 20 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகள்