< Back
சினிமா செய்திகள்
The trailer of DemonteColony2 has been released
சினிமா செய்திகள்

'டிமான்டி காலனி 2' படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
24 July 2024 8:22 PM IST

‘டிமான்டி காலனி 2 படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம், 'டிமான்டி காலனி'. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்டி காலனி ' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து மிரட்டலான டிரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இதில், பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட்15-ம் தேதி படம் வெளியாக உள்ளநிலையில், தற்போது இந்த டிரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்