< Back
சினிமா செய்திகள்
டான்ஸிங் ரோஸ் ஷபீர் நடித்துள்ள பர்த் மார்க் படத்தின் டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

'டான்ஸிங் ரோஸ்' ஷபீர் நடித்துள்ள 'பர்த் மார்க்' படத்தின் டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
16 Feb 2024 5:54 AM IST

'பர்த் மார்க்' திரைப்படம் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'பர்த் மார்க்'. இந்த திரைப்படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிர்னா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு பழங்கால முறையில், சுகப்பிரசவம் செய்வதற்காக கிராமம் ஒன்றுக்கு கதாநாயகன் அழைத்துச் செல்ல, அங்கு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதை. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 'பர்த் மார்க்' திரைப்படம் வருகிற 23-ந்தேதி வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்