< Back
சினிமா செய்திகள்
அவள் பெயர் ரஜ்னி படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

'அவள் பெயர் ரஜ்னி' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
17 Nov 2023 11:53 PM IST

காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள 'அவள் பெயர் ரஜ்னி' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு 4 மியூசிக்ஸ் இசையமைத்துள்ளளனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்வெஸ்டிகேசன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்