< Back
சினிமா செய்திகள்
அசோக் செல்வன், வசந்த் ரவி நடித்துள்ள பொன் ஒன்று கண்டேன் படத்தின் டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

அசோக் செல்வன், வசந்த் ரவி நடித்துள்ள 'பொன் ஒன்று கண்டேன்' படத்தின் டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
11 April 2024 8:03 PM IST

இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ளார்.

சென்னை,

அசோக் செல்வன், வசந்த் ரவி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பொன் ஒன்று கண்டேன்'. 2005-ம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய பிரியா இந்த படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார்.

'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் நேரடியாக ஜியோ சினிமா மற்றும் கலர்ஸ் தமிழில் வருகிற 14-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்