< Back
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
8 July 2022 6:10 AM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

'வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். வாலாஜாபாத்திலிருந்து ஈசிஆர் செல்லும் 90 நிமிட பயணத்தில் ஒரு பெண் ஓட்டுநர் சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, எப்படி தப்பிக்கிறார் என்பதே 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் கதையாகும்.

பரபரப்பான ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள 'டிரைவர் ஜமுனா' படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்