5-ம் தேதி வெளியாகிறது நடிகர் விஜய்யின் 'லியோ' பட டிரைலர்...!
|லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலர் வருகிற 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள்ர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'லியோ' திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி அதிவேகமாக வைரல் ஆனது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் டிரைலர் வருகிற 5-ம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் டிரைலர் குறித்த போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. எனினும், எத்தனை மணிக்கு டிரைலர் வெளியாகும் என்பது பற்றி எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.