சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!
|சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்களில் நடித்த சுரபி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆஃப்ரோ (ofRo) இசையமைக்கிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு 'டிடி ரிட்டன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.