< Back
சினிமா செய்திகள்
கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது
சினிமா செய்திகள்

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது

தினத்தந்தி
|
19 May 2023 8:18 PM IST

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'தேவரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்