< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

தினத்தந்தி
|
12 July 2023 8:45 PM IST

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இந்த படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்துக்கு 'மகாராஜா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்