< Back
சினிமா செய்திகள்
ஹீரோ, ஹீரோயினை வைத்து படம் பார்க்கும் காலம் மலையேறிவிட்டது - நடிகை வித்யா பாலன்
சினிமா செய்திகள்

ஹீரோ, ஹீரோயினை வைத்து ''படம் பார்க்கும் காலம் மலையேறிவிட்டது" - நடிகை வித்யா பாலன்

தினத்தந்தி
|
8 March 2023 7:23 AM IST

இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன், மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான த டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், "நான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமர்ஷியல் படங்களை தவிர்த்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனாலும் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கே இன்னும் ஒரு தெளிவு இல்லை.

மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து சினிமா பயணத்தை தொடர்கிறேன். என் மீது ஒரு முத்திரை குத்தி இமேஜ் வட்டத்துக்குள் வைத்து விட்டார்கள். கதாநாயகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் இருந்தது. அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ஓடியதை பார்த்தோம். ஆனால் இப்போது ஹீரோ, ஹீரோயினை பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. படத்தில் நல்ல கரு இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்'' என்றார்.

மேலும் செய்திகள்