< Back
சினிமா செய்திகள்
மூன்று கான்களும் ஒன்றாக நடிக்க ஆசை - அமீர்கான்
சினிமா செய்திகள்

'மூன்று கான்களும் ஒன்றாக நடிக்க ஆசை' - அமீர்கான்

தினத்தந்தி
|
17 March 2024 7:56 AM IST

ஒன்றாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கும் உள்ளது என்று அமீர்கான் கூறினார்.

மும்பை,

இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான், சமீபத்தில் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதற்கிடையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் அமீர்கான் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அப்போது ஒரு ரசிகர், 'ஷாருக்கான், சல்மான்கான், நீங்கள் என மூன்று கான்களும் எப்போது ஒன்றாக இணைந்து படம் நடிப்பீர்கள்?' எனக் கேட்டார்.

இதற்கு, ''எங்களுக்கும் அந்த ஆசை நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அதற்கான கதையையும் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்.

இதுகுறித்து நாங்களும் பலமுறை பேசியிருக்கிறோம். என்னுடைய விருப்பமும் அதுதான்'', என அமீர்கான் பதிலளித்தார்.

அமீர்கானின் இந்த பதில் ரசிகர்களை பரவசமாக்கி இருக்கிறது. விரைவில் அப்படி ஒரு படத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு திருமணத்தில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் ஒன்றாக மேடையில் 'நாட்டு... நாட்டு...' பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்