< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'கேப்டன் மில்லர்' படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது
|1 Jan 2024 7:42 PM IST
'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.