< Back
சினிமா செய்திகள்
விஷால் நடித்துள்ள  லத்தி படத்தின் டீசர் வெளியானது...!
சினிமா செய்திகள்

விஷால் நடித்துள்ள 'லத்தி' படத்தின் டீசர் வெளியானது...!

தினத்தந்தி
|
24 July 2022 8:45 PM IST

லத்தி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

'அயோக்யா' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். 'ராணா புரொடக்சன்ஸ்' சார்பாக ரமணா மற்றும் நந்தா தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.செப்டம்பர் 15-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் லத்தி படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்