தவறெனின் வலியதும் வீழும்... கவனம் ஈர்க்கும் திரு.மாணிக்கம் படத்தின் டீசர்
|நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள 'தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்' என்ற வசனம் கவனம் ஈர்ப்பதாக உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.