< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் டீசர் வெளியானது...!
|18 Oct 2023 5:11 PM IST
நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜப்பான் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.