< Back
சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ஃபைட்டர் படத்தின் டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'ஃபைட்டர்' படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
8 Dec 2023 7:22 PM IST

‘வார்’, ‘பதான்’ போன்ற படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் தமிழில் நடிகர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். இவர் தற்போது 'ஃபைட்டர்' எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'வார்', 'பதான்' போன்ற படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்