< Back
சினிமா செய்திகள்
துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
11 April 2024 5:57 PM IST

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்த படத்துக்கு 'லக்கி பாஸ்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், 'லக்கி பாஸ்கர்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் 'லக்கி பாஸ்கர்' என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்