< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
இயக்குனர் அமீர் நடித்துள்ள 'மாயவலை' படத்தின் டீசர் வெளியானது..!
|9 Dec 2023 2:47 PM IST
இயக்குனர் அமீர் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் அமீர். இவர் பருத்திவீரன், ராம், மெளனம் பேசியதே போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதேசமயம் கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்னும் படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை படத்திலும் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குனர் அமீர், சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண் உள்ளிட்டோர் நடிக்கும் 'மாயவலை' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அமீர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.