< Back
சினிமா செய்திகள்
அர்ஜுன் தாஸ், காளிதாஸ் இணைந்து நடிக்கும் போர் படத்தின் டீசர் வெளியானது
சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் இணைந்து நடிக்கும் 'போர்' படத்தின் டீசர் வெளியானது

தினத்தந்தி
|
27 Jan 2024 3:55 PM IST

'போர்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சென்னை,

இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'போர்'. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

'போர்' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்