< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்' திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது

தினத்தந்தி
|
27 Dec 2023 6:17 PM IST

'லவ்வர்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகௌரி பிரியா, கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'வெலகாத' பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 'லவ்வர்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்