< Back
சினிமா செய்திகள்
சைரன் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
சினிமா செய்திகள்

சைரன் படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தினத்தந்தி
|
26 Jan 2024 11:42 PM IST

ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், 'சைரன்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'நேற்று வரை' பாடலின் லிரிக் வீடியோ 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்