< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டம்
சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டம்

தினத்தந்தி
|
21 Feb 2023 8:59 AM IST

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறது. சாணி காயிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி 'கேப்டன் மில்லர்' படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் செய்திகள்