< Back
சினிமா செய்திகள்
The team of vidaamuyarchi released the first look of Arjun
சினிமா செய்திகள்

அர்ஜுனின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட'விடாமுயற்சி' படக்குழு

தினத்தந்தி
|
28 July 2024 1:19 PM IST

அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ’விடாமுயற்சி’ படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. சமீபத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

அஜர்பைஜானில் நடந்துவந்த 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 'விடாமுயற்சி' படக்குழு வெளியிட்டுள்ளது. இது விடாமுயற்சி படத்தின் 4-வது லுக்காகும்.

மேலும் செய்திகள்