< Back
சினிமா செய்திகள்
பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்ட சூர்யா 44 படக்குழு
சினிமா செய்திகள்

பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்ட 'சூர்யா 44' படக்குழு

தினத்தந்தி
|
23 July 2024 3:26 AM IST

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 44' படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 44' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று (ஜூலை 23) நடிகர் சூர்யா தன்னுடைய 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'சூர்யா 44' படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்த வீடியோவில் கேங்ஸ்டராக வரும் சூர்யா ஒருவரை துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ முடிவில் படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்