< Back
சினிமா செய்திகள்
ஆட்ட நாயகியாக மாறிய கங்கனா.. வைரலாகும் வீடியோ
சினிமா செய்திகள்

ஆட்ட நாயகியாக மாறிய கங்கனா.. வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
30 Aug 2023 10:13 AM GMT

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் 'ஆட்டநாயகி' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்