< Back
சினிமா செய்திகள்
கங்குவா படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு
சினிமா செய்திகள்

கங்குவா படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு

தினத்தந்தி
|
23 July 2024 2:06 PM IST

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான இன்று கங்குவா படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 49வது பிறந்தநாளான இன்று கங்குவா படத்தின் முதல் பாடலான "ஆதி நெருப்பே...ஆறாத நெருப்பே..." என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேகா பாடல் வரிகளுக்கு மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்