கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு
|கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்த மாமன்னன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரகு தாத்தா'. பிரபல எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் சுதந்திர நாளான வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.