செம்மரக்கடத்தலில் கொல்லப்பட்டவர்கள் கதை...!
|உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘ரெட் சாண்டல் வுட்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது
தமிழகத்தின் ஜவ்வாது மலை, படவேடு மலைப்பிரதேசங்களில் இருந்து 2015-ல் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட போனதாக சொல்லி திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'ரெட் சாண்டல் வுட்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.
இதில் நாயகனாக வெற்றி, நாயகியாக தியா மயூரிக்கா, ராம், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட் ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குரு ராமானுஜம் டைரக்டு செய்துள்ளார். என்கவுண்ட்டர் செய்ய சொன்னது யார்? சாதாரண ஜெயில் தண்டனை கொடுக்க கூடிய செம்மரம் வெட்டுக்கு மனித உரிமை மீறலாக கொலைகளை ஏன் செய்தார்கள் என்ற உண்மை சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று அவர் கூறினார்
பட நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசும்போது, "தமிழர்கள் எந்த பக்கம் போனாலும் காரணமின்றி தாக்கப்படுவார்கள். ஆனால் பின்னணியில் யாரோ இருப்பார்கள். அப்பாவி தமிழன்தான் அநியாயமாக பாதிக்கப்படுவான். நல்ல படங்கள் ஓடும். தேசிய விருது பெற்ற 'கடைசி விவசாயி' நல்ல படம்" என்றார்.