< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஈழத் தமிழர்கள் கதை
|4 Aug 2023 3:14 PM IST
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பை மையமாக வைத்து `பேர்ல் இன் தி பிளட்' என்ற படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை கென் கந்தையா இயக்கி தயாரித்துள்ளார். இதில் சம்பத் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயசூர்யா, காட்வின் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து டைரக்டர் பேரரசு கூறும்போது, ``இந்தப் படத்தின் கதையை தாங்கிச் செல்லும் கதாபாத்திரம் என்று சம்பத் குமாரை சொல்லலாம்.
படத்தை பார்க்கும் போது நமக்கு ஆத்திரம் வருகிறது. தமிழ் மக்களை கொடூரமாக கொலை செய்திருப்பதை பார்க்கும் போது ரத்தம் கொதிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரது விருப்பம். ஆனால், அது நடக்கவில்லை.
இது வியாபாரத்திற்காக எடுக்கப்பட்ட படம் அல்ல, தமிழர் என்ற உணர்வுக்காக எடுத்த படம்'' என்றார்.