'வாரிசு' படத்தில் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வெளியானது..!
|.விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.
சென்னை,
தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகிறார். குடும்ப ரசிகர்களை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், வாரிசு' படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ படக்குழுவால் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 30 விநாடி அளவில் ப்ரோமோ பாடல் வெளியாகியது.
இந்த நிலையில் ரஞ்சிதமே... ரஞ்சிதமே எனத் தொடங்கும் முழு பாடல் இன்று வெளியாகியுள்ளது.விஜய் மற்றும் மானசி எம்.எம் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள்.
எப்போதும் போல விஜய் இப்பாடலில் தாறுமாறான நடனத்தை கொடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
#Ranjithame is all yours now
— Sri Venkateswara Creations (@SVC_official) November 5, 2022
Lyric video ▶️ https://t.co/pfJ3GAAymT
️ #Thalapathy @actorvijay sir & @manasimm
@MusicThaman
️ @Lyricist_Vivek@directorvamshi @iamRashmika @AlwaysJani #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries
#Varisu #VarisuPongal