'ரகு தாத்தா' படத்தின் 'எழுந்து நின்று போரிடு' பாடல் வெளியானது
|கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' படத்தின் 'எழுந்து நின்று போரிடு' பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தசரா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இப்படத்தின் முதல் பாடலான 'அருகே வா' பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். 2-ம் பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடலை கானா பாடகரான கானா விமலா பாடியுள்ளார். மேலும் 3-வது பாடலான 'பொறுத்திரு செல்வா' பாடலும் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது 4-வது பாடலான 'எழுந்து நின்று போரிடு' பாடலும் வெளியாகி உள்ளது. இந்த பாடலை எம்.எம்.மானசி பாடயுள்ளார். இது குறித்த பதிவை ஷான் ரோல்டன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் நாளை வெளியாகவுள்ளது.