விமல் நடிக்கும் 'தேசிங்கு ராஜா 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
|இன்பினிட்டி கிரியேசன்ஸ் தயாரிக்கும் 'தேசிங்கு ராஜா 2' படத்துக்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.
சென்னை,
இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான 'தேசிங்கு ராஜா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்பினிட்டி கிரியேசன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தேசிங்கு ராஜா 2' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.