< Back
சினிமா செய்திகள்
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
சினிமா செய்திகள்

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தினத்தந்தி
|
16 July 2023 9:12 PM IST

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் 'மதுரை வீரன்' படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். "வால்டர்", "ரேக்ளா" படங்களை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கேரளா காடுகளில் தொடங்கியுள்ளது. மேலும் ஒரிசா, தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பை ஆடி 18 -ம்தேதி அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்