< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

தினத்தந்தி
|
1 Dec 2023 1:59 PM IST

மலேசியாவில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படத்தை இயக்குனர் பி. ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தை 7சி-ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகிபாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மலேசியாவில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்க இருக்கின்றன. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்