< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'பேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
|18 March 2024 6:18 AM IST
'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'கீதா கோவிந்தம்', சர்க்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பில் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். 'பேமிலி ஸ்டார்' திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.